கடன் தொகை தொடர்பான தகராறு வன்முறையாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமல், விக்னேஷ் என்பவருக்கு ரூ.90,000 கடனாக வழங்கியிருந்தார். பணம் திருப்பி வழங்க தாமதமானதால், விமலின் ஆதரவாளர்கள் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அது கைகலப்பாக மாறி, விக்னேஷின் நடுவிரலை கடித்து துண்டித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.