சிலிண்டர் வெடித்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

சென்னை அருகே நாவலூரில் கடந்த 15ஆம் தேதி அதிகாலை கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீடு இடிந்து விழுந்து 2 குழந்தைகள் பலியாகினர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வைரமுத்து (45) 23ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மனைவி செல்வி (40), மகன் பிரதீப் (7) ஆகியோரும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் கட்டுப்பாடுகள் காரணமாக இதுவரை அரசு தரப்பில் எவ்வித நிவாரண உதவியும் அறிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி