சீனாவில் மழை, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21-ஆக உயர்வு

சீனாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரால் நூற்றுக்கணக்கான வீடுகளும், உள்கட்டமைப்புகளும் கடுமையாக சேதமடைந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி