கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா ஏமனில் மஹ்தி என்பவருடன் சேர்ந்து கிளினிக் ஆரம்பித்தார். நிமிஷாவிடம் இருந்து கிளினிக்கை அபகரிக்க முயன்ற மஹ்தி அவரை தொடர்ந்து துன்புறுத்தினார். இந்த பிரச்சனையில் மஹ்திக்கு நிமிஷா மயக்க ஊசி செலுத்தியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் நிமிஷாவுக்கு கடந்த 2018ல் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து அவர் தாய் போராடினார். இந்நிலையில் ஜூலை 16ல் நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.