CSK அணிக்கெதிரான போட்டியில் KKR அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 104 ரன்கள் என்ற எளிய இலக்கை சேஸ் செய்த KKR அணி பேட்டர்கள் CSK பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அந்த அணி வெறும் 10.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுனில் நரைன் 44, டி காக் 23 மற்றும் ரஹானே 20* ரன்கள் குவித்தனர். CSK தரப்பில் காம்போஜ் மற்றும் நூர் அகமது தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.