தமிழகம் முழுவதும் முதுநிலை படிப்பிற்கான விண்ணப்பம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் (ஜூலை 15) முடியவிருந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி இம்மாதம் இறுதி (ஜூலை 31) வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறப்பு பிரிவு மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 11 ஆம் தேதியும், பொது பிரிவு மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 13 ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.