மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான CUET UG நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில், இன்று (பிப்.23) முதல் பிப்.26ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்தது தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இது, இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களில் சேர்வதற்கான ஒரு தரப்படுத்தப்பட்ட தேர்வாகும்.