ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்.8) டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்துள்ளது. தொடர்ந்து, களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் போராடி தோற்றது.