மாமியார் தலை மீது கல்லைப்போட்டு கொன்ற மருமகள்

கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாப்பாத்தி (72). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது மகன் லோகநாதன் (50), மற்றும் மருமகள் விஜயலட்சுமி (45) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவனுடன் நடந்த தகராறால், கணவனை பிரிந்து தனது தந்தை வீட்டிற்கு சென்ற விஜயலட்சுமி, அவ்வப்போது மாமியார் வீட்டிற்கு வருவதும் போவதுமாய் இருந்துள்ளார். அப்போது, கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பாப்பாத்தி கூறியதால் ஆத்திரமடைந்து அவர் தலைமீது கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி