கோவை மாவட்டம் கணபதி பகுதியில் காலமான மாமியாரின் சடலம் வைக்கப்பட்ட குளிர்சாதன பெட்டிக்கான ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றும் போது, ஏற்பட்ட தீ விபத்தில் மருமகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இறுதி அஞ்சலியின்போது மின்வெட்டு ஏற்பட்டது. அப்போது ப்ரீசர் பாக்ஸை ஜெனரேட்டரில் இணைத்து, அதற்கு பெட்ரோல் ஊற்றும் போது அருகில் இருந்த விளக்கில் பட்டு தீ பரவி, பத்மாவதி (53) என்பவர் புகை மூட்டத்தால் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
நன்றி: பாலிமர்