ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், மாமியார் துன்புறுத்தியதால் அவரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெயந்தி கனக மகாலட்சுமி (66) என்ற மாமியார், மருமகள் லலிதாவை தேவையில்லாமல் துன்புறுத்தி வந்ததால், வீட்டில் யாரும் இல்லாதபோது, லலிதா மாமியாரைக் கட்டிப்போட்டு, பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் ஜெயந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதலில் விபத்து என நாடகமாடிய லலிதா, பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.