கல்வி உலகில் எப்போதும் முன்னோடியாகத் திகழும் சென்னை ஐஐடி (IIT Madras), தற்போதைய டிஜிட்டல் யுகத்தின் தேவையை உணர்ந்து ஒரு புரட்சிகரமான புதிய இளங்கலை பாடப்பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. 'மேனேஜ்மென்ட் மற்றும் டேட்டா சயன்ஸ்' (BS in Management and Data Science) என்ற இந்த புதிய படிப்பு, வணிக நிர்வாகத்தையும் தரவு அறிவியலையும் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.