எத்தியோப்பியாவில் 10,000 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த 'ஹேலி குப்பி' எரிமலையில் இருந்து எழுந்த சாம்பல் மண்டலம், இந்தியாவை நோக்கி 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எரிமலை சாம்பலால் வானம் வழக்கத்தைவிட இருண்டு காணப்படும் என்றும், இந்த சாம்பல் மண்டலம் இரவு 7:30 மணிக்கு இந்தியாவை விட்டு விலகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.