புதிய ஆடைகளை துவைக்காமல் அணிவதால் ஏற்படும் ஆபத்துகள்

கடைகளில் இருந்து புதிதாக வாங்கி வரும் ஆடைகளை அப்படியே நேரடியாக அணிவது சருமத்திற்கு பலவிதமான பேராபத்துகளை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆடை உற்பத்தியின் போது பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், சாயங்கள் மற்றும் கடைகளில் பலரின் கைகள் படுவதால் ஏற்படும் கிருமிகள் அலர்ஜியையும் அரிப்பையும் ஏற்படுத்தக்கூடும். எனவே, புதிய ஆடைகளை வாங்கியவுடன் ஒருமுறை நன்றாக துவைத்து, வெயிலில் உலர்த்திய பின்னரே அணிவது சரும ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது.

தொடர்புடைய செய்தி