ஆந்திரா மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சிப்புருபுள்ளி தொகுதி குர்லா கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. வயிற்றுப்போக்கு பாதிப்பால் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துமவனையில் போதிய இடம் இல்லாததால் அங்குள்ள அரசு பள்ளியில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 8 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.