அட்டகத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகும் 'தண்டகாரண்யம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தை இயக்கிய அதியன் ஆதிரை இப்படத்தை இயக்குகிறார். பா.ரஞ்சித் இணைந்து தயாரிக்கிறார். "ஒரு நாட்டை பாதுகாக்க வெறும் துப்பாக்கி பீரங்கி அணுகுண்டுகளால மட்டுமே முடியாது" என்ற வாசகத்தை குறிப்பிட்டு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.