பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆய்வு

சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி தலைமையில் இன்று (மே 27) பால்வளத்துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பால் உற்பத்தி, கொள்முதல், உற்பத்தியாளர் ஒன்றியங்கள், கூட்டுறவு இணையம், உள்கட்டமைப்பு, பணியாளர் நலத்திட்டங்கள், பால் விற்பனை, தீவனங்கள், தூய பால் உற்பத்தி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிர்வாகத்தை செயல்படுத்தவும், பால் உற்பத்தியாளர்களின் நலன் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி