சிலிண்டர் விலை மீண்டும் உயரும் அபாயம்

தமிழகத்தில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.957.50 ஆகவும், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.3,106 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வணிக சிலிண்டர் விலையில் சமீபத்தில் ரூ.172 முதல் ரூ.183.50 வரை அதிரடி குறைப்பு செய்யப்பட்டது. இதனிடையே மீண்டும் ஈரான், அமெரிக்கா போர் தொடங்கியுள்ளதால் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய், எரிவாயு வினியோக சங்கிலி பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதே நிலை நீடித்தால் கேஸ் சிலிண்டர் விலை உயர வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி