சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைப்பட்டறையில் சிலிண்டர் கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் உரிமையாளர் சுமன் பால் படுகாயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், நகைப்பட்டறை ஊழியர்கள் அரவிந்த், சூரஜ், ஆனந்த், இந்திரஜித் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.