டிட்வா புயலால் தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி மயிலாடுதுறை, விழுப்புரத்தில் 2 பேரும், வீடு இடிந்து விழுந்து தூத்துக்குடி, தஞ்சாவூரில் 2 பேர் என மொத்தமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் KKSSR இராமச்சந்திரன் கூறியுள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் 582 கால்நடைகள் பலியாகியுள்ள நிலையில், 601 வீடுகள் சேதமாகியுள்ளன. 85,521.76 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கிய நிலையில், விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.