கரையைக் கடந்தது 'முரசு' புயல்

தெற்கு ஆந்திர கடற்கரையில், நெல்லூர் மற்றும் நர்சாபூர் இடையே 'முரசு' என்ற தீவிர சூறாவளி புயல் இன்று அதிகாலை 3.30 மணி முதல் 5 மணிக்குள் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வரை இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி

✕
✕