மோந்தா புயல் காரணமாக, 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரிக்கு இயக்கப்படும் 12 விமான சேவைகளை ரத்து செய்த இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இதனால், விமான பயணிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும், வங்கக் கடலில் தீவிரம் பெற்றுள்ள மொந்தா புயல் இன்று (அக்.28) மாலை ஆந்திர மாநிலம் காக்கி நாடா அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.