மொசாம்பிக்கில் சூறாவளி தாக்குதல்.. 4 பேர் பலி

மொசாம்பிக்கில் இன்ஹேம்பன் மாகாணத்தில் மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. இதில், 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு லட்சம் பேர் வசிக்க கூடிய இந்த மாகாணத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மின் விநியோக இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு தேசிய மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோன்று மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி