அர்னாப் புயல் முன்கூட்டியே கரையை கடக்க வாய்ப்பு

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அர்னாப் புயலின் வெளிச்சுற்று கரையைத் தொட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மற்றும் வடசென்னை கடற்பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ஆந்திர மாநிலத்தின் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே அர்னாப் புயல் மிகத் தீவிர புயலாகக் கரையைக் கடக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. முதலில் வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕