'அக்வான்' புயல் எச்சரிக்கை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

'அக்வான்' புயல் சின்னம் காரணமாகத் தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாளை புயலாக வலுப்பெற உள்ளதால் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என்பதால், சூழலைப் பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து மாவட்ட நிர்வாகங்கள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕