வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த 'அக்வான்' புயல், ஒடிசாவின் கோபால்பூர் அருகே இன்று கரையைக் கடந்தது. இதன் காரணமாக வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் முழுமையாகக் கரையைக் கடக்கும் நிகழ்வு மேலும் 2 மணி நேரம் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 90 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.