தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் மிகவும் பிரபலமான மால் ஒன்றில் வாங்கிய Corn Flakes மிக்சர் டப்பாவில் பல்லி இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர், தனது குழந்தைகளுக்கு அந்த மிக்சரை ஊட்டிய போது வித்தியாசமான பொருள் ஒன்று அதில் கிடந்துள்ளது. முதலில் அதை கறிவேப்பிலை என நினைத்த பெண், உற்று கவனித்த போதுதான், அது வறுக்கப்பட்ட பல்லி என்பது தெரியவந்துள்ளது. இதனை வீடியோவாக பதிவு செய்த பெண், புகார் அளித்துள்ளார்.
நன்றி: hyderabadmail