உலகில் ஆயிரக்கணக்கான ஆறுகள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவுகள் மற்றும் நீளங்களைக் கொண்டுள்ளன. அந்த வகையில், உலகின் மிகக் குறுகிய நதி என்ற பட்டத்தை அமெரிக்காவின் மொன்டானாவில் உள்ள ரோ நதி பெற்றுள்ளது. இது ஜெயண்ட் ஸ்பிரிங்ஸிலிருந்து மிசோரி நதி வரை 201 அடி (61 மீட்டர்) மட்டுமே பாய்கிறது. கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பட்டியலிடப்பட்டவுடன், 1989ஆம் ஆண்டு கிரேட் ஃபால்ஸில் உள்ள உள்ளூர் மாணவர்களின் பள்ளித் திட்டத்தின் மூலம் இது பிரபலமானது.