லடாக்கில் தொடரும் ஊரடங்கு.. மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

லடாக்கில் இன்று (செப்.26) மூன்றாவது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. லடாக் மாநில அந்தஸ்து கோரிக்கையுடன் இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதன் காரணமாக அங்கு ஊரங்கு அமலில் உள்ளது. பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐந்து பேருக்கு மேல் சாலைகளில் ஒன்றுகூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி