குதிரைவாலி சாகுபடி

பொதுவாக குதிரைவாலி பயிரானது வறட்சி, மண் உவர்ப்பு ஆகியவற்றைத் தாங்கி வளரக்கூடிய மானாவாரி சிறுதானியப் பயிராகும். குதிரைவாலி பயிரிட ஒரு ஏக்கருக்கு மூன்று முதல் நான்கு கிலோ விதை போதும். கோடையில் நிலத்தை 2 முறை கலப்பையை கொண்டு உழுது பக்குவப்படுத்தி, தொழுவுரமோ அல்லது ஆட்டுக்கிடையோ போட்டு நிலத்தை ஊட்டமேற்றி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு மழை பெய்தவுடன் சரியான ஈரத்தில் உழும்போதே, விதைத்துவிட வேண்டும். தேவைப்பட்டால் களை எடுத்துக்கொள்ளலாம். பலர் களைகூட எடுப்பது கிடையாது. களையை மீறி வளரும் திறன் கொண்டது குதிரைவாலி.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி

✕
✕