கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா நகர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மகேந்திரன், 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவரை அக்கா வீட்டிற்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததாகத் தெரிகிறது. இது குறித்து சிறுமி திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர்.