பின்னர் பரவலூர் வந்ததும் பஸ்சில் இருந்து இறங்கிய கீதா தான் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தார். அப்போது அதில் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூபாய் 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பேருந்தில் பயணித்த போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர் அவற்றை அபேஸ் செய்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து கீதா விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விருத்தாசலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு