விருத்தாசலம்: மணல் கடத்தியவர் கைது

விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத நேரு தலைமையிலான போலீசார் பூதாமூர் மணிமுக்தாறு சுடுகாட்டுப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆற்று மணல் கடத்தி வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது, லாரியை ஓட்டி வந்த விருத்தாசலம் சாவடிக்குப்பம் வடிவேல் மகன் காளிமுத்து (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லாரி மற்றும் உடந்தையாக இருந்த பிரகாஷின் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி