விருத்தாசலம்: மணல் கடத்தியவர் கைது

விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாரதநேரு தலைமையிலான போலீசார் பூதாமூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சாவடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (30) என்பவர் மினிலாரியில் ஆற்றுமணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து காளிமுத்துவை கைது செய்தனர். மேலும், தலைமறைவான திரு. வி. க நகர் பிரகாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி