விருத்தாசலம்: கார் மோதி விவசாயி உயிரிழப்பு

விருத்தாசலம் அடுத்த கோட்டேரி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் (62) மற்றும் அவரது சம்பந்தி பாலசுப்பிரமணியன் (55) ஆகியோர் கோ. மாவிடந்தலில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர். புதுக்கூரைப்பேட்டை அருகே வந்தபோது, எதிரே வந்த கார் அவர்கள் மீது மோதி பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த தேவேந்திரன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி