விருத்தாசலம்: ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு

விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே வயலூர் மேம்பாலம் அருகில், வந்தே பாரத் ரயிலில் அடிபட்டு சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருத்தாசலம் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இளைஞரின் அடையாளம் மற்றும் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை. இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி