கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி உச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி அனிதா. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. அருண்குமார் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (மே 31) மீண்டும் வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.