விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மனைவி நந்தினி (26), தாமரை குளம் அருகில் உள்ள புளிய மரத்தில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 2021-ல் திருமணம் ஆன இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. பாலமுருகன் ஆழ்துளை கிணறு தோண்டும் பணி செய்து வருகிறார். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.