கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக் டர் சங்கர் தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவங்குடி கிராமத்தை சேர்ந்த அரவிந்த் என்பவர் பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அரவிந்த்தை காவல் துறையினர் கைது செய்து மேலும் அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.