கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விருத்தாசலம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் பாலக்கரையில் வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைக்கவசம் அணிவதன் அவசியம், இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும், மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது, ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும், மிதமான வேகத்தில் செல்ல வேண்டும், அனுமதிக்கப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும், சீட் பெல்ட் அணிய வேண்டும் போன்ற விதிமுறைகள் வலியுறுத்தப்பட்டன.