அப்போது அங்கு வந்த 15 க்கும் மேற்பட்டவர்கள் கத்தி, பீர் பாட்டில்களால் சித்தார்த்தனை சரமாரியாக குத்தி தாக்கினர். இதை அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பிரகாஷ், வேல்அழகன், பாலாஜி ஆகியோர் பார்த்தனர். அவர்கள் தடுக்க முயன்ற போது, அவர்களையும் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சித்தார்த்தன், பிரகாஷ், வேல்அழகன், பாலாஜி ஆகியோர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து விருத்தாசலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 15 பேர் கொண்ட கும்பல் யார்? என்பது குறித்து விசாரித்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.