கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேற்கு கோபுர வீதியைச் சேர்ந்த சதீஷ் ராஜாவின் மோட்டார் சைக்கிளை திருடியதாக சின்னசேலம் விஜயபுரத்தைச் சேர்ந்த டேனியல் பாபுவை (51) விருத்தாசலம் போலீசார் கைது செய்தனர். ரோந்து பணியின்போது சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த திருட்டு சம்பவம் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.