கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கொணலவாடியைச் சேர்ந்த கீர்த்தனா (23) என்பவர் கடந்த 16 ஆம் தேதி வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. விருத்தாசலம் சித்த மருத்துவமனையில் பணிபுரியும் கீர்த்தனாவை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தாய் அமுதா அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.