தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து, விருத்தாசலம் எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரங்களில் தமிழக முதலமைச்சர் நேரடியாக கவனம் செலுத்தி, சட்டம் - ஒழுங்கை வலுப்படுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நிரந்தர தீர்வுகள் காண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.