விருத்தாசலம்: பணம் வைத்து சூதாடியவர் கைது; 4 பைக் பறிமுதல்

விருத்தாசலம் போலீஸ் எஸ். ஐ. பாரத நேரு மற்றும் போலீசார் நேற்று கார்குடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பலை கண்டனர். அவர்கள் தப்பி ஓட முயன்றபோது, ராஜாமணி (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய மற்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி