விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் நடந்து சென்ற மின்வாரிய ஊழியர் இளஞ்செழியன் (58) மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.