விருத்தாசலம்: குட்கா விற்ற முதியவர் கைது

விருத்தாசலம் அருகே பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி, விருத்தாசலம் போலீசார் பரவளூர் ராமசாமி மகன் துரைசாமி (66) என்பவரை கைது செய்தனர். நேற்று மாலை ரோந்து சென்றபோது இந்த சம்பவம் தெரியவந்தது. அவரிடமிருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி