விருத்தாசலம்: வாலிபர் மீது வழக்கு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் மேல்பாதி கிராமத்தை சேர்ந்த சிவகுருநாதன் மகள் வர்ஷினி சாத்துக்கூடல் கீழ்பாதி கிராமம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் பள்ளியின் எதிர்புறம் உள்ள பெட்டிக்கடைக்குச் சென்ற மாணவியை சாத்துக்கூடல் மேல்பாதி கிராமம் வீராசாமி மகன் விஜய் தாக்கினார். இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விஜயை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி