கம்மாபுரம் அருகே மும்முடிச்சோழகன் கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் கவியரசன், விருத்தாசலம் அருகே முதனை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து உல்லாசமாக இருந்துள்ளனர். தற்போது சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் கவியரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.