விருத்தாசலம்: வாலிபர்களை குத்திய 7 பேர் கைது

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த குறவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சித்தார்த்தன் இவர் விருத்தாசலம் அடுத்த கானாதுகண்டான் டாஸ்மாக் கடை பின்புறத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை கத்தி பீர் பாட்டில்களால் தாக்கியது. இதை தடுக்க முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், வேல்அழகன், பாலாஜி ஆகியோரையும் அந்த கும்பல் குத்தியது. இதில் 4 பேரும் காயமடைந்தனர். இது குறித்த புகாரின்பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சித்தார்த்தன் மீதான முன்விரோதம் காரணமாக கோட்டேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், பிரபாகரன், கஜா உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்டவர்கள் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணியன், பிரபாகரன், கஜா, ராஜா, வீரபாண்டியன், ஜெயபாலன், விஜய் ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி